யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து வெடிகுண்டு தொகை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். குறித்த வெடிபொருட்கள் கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளன.
13 வெடிக்குண்டுகள், 60 கைக்குண்டுகள், 06 மோட்டார் குண்டுகள் இவற்றில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சிறப்பு அதிரடிப்படையினரால் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டு அரியாலையில் நேற்று பாதுகாப்பாக வெடிக்க வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.