Sinniahஇலங்கை கடற்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும், வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, 2017 அக்டோபர் 25ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அட்மிரலாகப் தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1982ம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்த அட்மிரல் சின்னையா 35 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். இலங்கை கடற்படைத் தளபதியாக கடந்த அகஸ்ட் மாதம் 22ம் திகதி பதவியேற்ற, ட்ராவிஸ் சின்னையா, இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.