ரக்பி வீரர் வசிம் தாஜூதீனின் கொலை வழக்குடன் தொடர்புடைய கொழும்பு முன்னாள் பிரதம சட்டமன்ற வைத்திய அதிகாரி, பேராசிரியர் ஆனந்த சமரசேகர இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
வசிம் தாஜூதீனின் தலைப்பகுதியின் எச்சங்கள் காணாமற்போனமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும் பேராசிரியர் ஆனந்த சமரசேகரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தது. பேராசிரியர் ஆனந்த சமரசேகர, தாஜூதீனின் கொலை தொடர்பில் முக்கிய சாட்சியங்களை மறைப்பதாகவும் அவற்றை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தது.