manus iland refugeesபப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவின் அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் கடற்கடந்த விசாரணை கொள்கையின் அடிப்படையில், ஈழ அகதிகள் உள்ளிட்ட 700க்கும் அதிகமானவர்கள் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பப்புவா நியுகினி நாட்டின் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவின் அடிப்படையில், இந்த மாதம் 31ம் திகதியுடன் குறித்த முகாம் மூடப்படவுள்ளது. இந்த நிலையில் முகாமை மூடுவதற்கான நாட்கள் நெருங்க நெருங்க, அங்குள்ள அகதிகள் துன்புறுத்தல்களுக்கும், கொள்ளையடிப்புகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இது தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கம் விரைவான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.