teacherகல்வி அமைச்சினால் கடந்த மூன்று வருடங்களாக ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதனால் சுமார் ஒரு இலட்சம் ஆசிரியர்கள் பதவி உயர்வினை பெறாத நிலையில் கடமையாற்றி வருவதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாத காரணத்தை ஆராய்ந்து, உரிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.