இந்தோனேசியத் தலைநகரான ஜகத்ராவுக்கு அருகில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இவ் வெடிப்புச் சம்பவத்தில் 46 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் வைத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். இத் தொழிற்சாலையில் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட வாகனமொன்றிலேயே நேற்று இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணையை அந் நாட்டு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். குறித்த இத் தொழிற்சாலை கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 103 தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.