இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதன் முதற்கட்டமாக, இன்று முதல் தற்காலிக அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. ஆட்பதிவு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் வரையில், இதனைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய அடையாள அட்டைகளைக் கொண்டுள்ளவர்கள், புதிய தற்காலிக அட்டைகளை பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்றும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.