வவுனியா உக்கிளாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீட்டுக் கிணற்றில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமையில் இருந்து காணாமல் போயிருந்த 26 வயதுடைய தியாகலிங்கம் ரகுவரன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.