றோகிஞ்சா அகதிகளுக்கு உதவ இலங்கை அரசாங்கம் முன் வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், தென்கொரியா, கனடா, பிரான்ஸ், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும், பல்வேறு அமைப்புகளும், றோகிஞ்சா அகதிகளுக்கு உதவிகளை வழங்கி வருகின்றநிலையில், குறித்த பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடக செயலாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.