housing scheme (2)50 மாதிரி கிராமங்கள் ஊடாக 1200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன. இதற்காக இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபாய் மானியமாக வழங்கவுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.கே.கே.அத்துகோரல ஆகியோருக்கு இடையில் இந்த புரிந்துணர்வுகள் நேற்று கைச்சாத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அம்பாந்தோட்டையில் நடைபெற்றுள்ளது. மலையகம் மற்றும் வடக்கு கிழக்கிலும் இந்திய அரசாங்கத்தின் மானியங்களுடன் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.