முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று காலை இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் அவர் இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இன்று மற்றும் நாளை இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச பௌத்த சம்மேளத்தின் பிரதான விருந்தினராக கலந்து கொள்ள அவர் இவ்வாறு இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இம் மாநாட்டில் கலந்துகொண்டு பிரதான உரையாற்றுமாறு சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் பிரதானிகள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேட்டுக் கொண்டதாகவும், இதற்கிணங்ககே அவர் இம்மாநாட்டில் பிரதான உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.