1284526037protest-in-trincoவடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் புதிய அரசியல் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை நகர் மணிக்கூடு கோபர சந்தியில் இன்று ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

தேசிய சுதந்திர முன்னனியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. காலை 10.45 மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டம் 11.45 மணியளவில் முடிவுற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைப்பு, வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு எதிராகவும் மற்றும் எதிர்கட்சி தலைவர், பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மக்கள் சங்கத்தின் தலைவருமான ஜயந்த விஜேசேகர கிழக்கு மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பை விரும்பவில்லை என தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.