foreign-ministryகேட்டலோனியா, ஸ்பெயினுக்கு சொந்தமான ஒரு பகுதி என்பதே தமது நிலைப்பாடு என இலங்கை அறிவித்துள்ளது. கேட்டலோனிய பிராந்திய சட்டமன்ற சுயாட்சி தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு இலங்கை முழு ஆதரவையும் வழங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினுக்கும் இலங்கைக்கும் நீண்ட காலமாக சிறந்த இராஜதந்திர உறவு நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு முக்கிய உறுப்பு நாடாக ஸ்பெயின் விளங்குவதாகவும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.