sfdfdfdffdfdfஅரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தின் ஆரம்பத்திலேயே குழப்ப நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.

அதில், ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு தடை ஏற்படுத்தும் வகையில், தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்து கருத்து வெளியிட்ட சபாநாயகர் கரு ஜெயசூரிய, 2000 பேரளயில் மக்கள் இணைந்து பாதையை இடைமறித்துள்ளதாக பொலிஸார் எமக்கு கூறினார்கள். 2000, 3000 பேரளவில் நாடாளுமன்றத்துக்கு அத்துமீறி நுழைய தயாராக உள்ளதாகவும், அதற்கு பொலிஸார் இடமளிக்கமாட்டார்கள் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வரத் தடை ஏற்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்;. இதேவேளை, ஆளுந்தரப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இதன்போது கருத்து வெளியிட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருவதற்கு எவ்வித தடையும் இல்லை. தாங்களும் அவ்வழியே வந்ததாகவும், ஊடகங்களுக்கு பொய்யான தகவலை வழங்க பொது எதிரணியினர் இவ்வாறு குறிப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் பிரதியமைச்சர் டுலீப் விஜயசேகரவும் கலந்து கொண்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தபால் சேவைகள் பிரதியமைச்சராக இருந்த டுலீப் விஜயசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.