இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஈ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக முக்கியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து இரண்டு நாடுகளும் கூர்ந்த அவதானத்தை செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனை சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அங்கு அவர், சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது, அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் அதேநேரம், இரண்டு நாடுகளின் பரஸ்பர அரசியல் நம்பிக்கையும் அத்தியாவசியமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.