அம்பலாங்கொடை ஆந்தாகல புகையிரத கடவையில் நேற்றுமாலை 4.23க்கு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன், பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். விசேட அதிரடிப்படையின் உப பரிசோதகர்கள் இருவரே பலியானதாக தெரிவிக்கப்பட்ள்ளது.
அவர்கள் பயணித்த கார் புகையிரதத்துடன் மோதுண்ட நிலைலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலேயே, அக்கார் மோதுண்டுள்ளது. சம்பவத்தில், விசேட அதிரடிப்படையில் கடமையாற்றும் உப-பொலிஸ் பரிசோதகர்கள் இருவரே பலியாகியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பெண்ணொருவர், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.