rtytytபாதுகாப்பு தரப்பினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு ஊர்வலமொன்று இன்று இடம்பெற்றது.

வவுனியா ஏ9 வீதியில் கடந்த 250 நாட்களாக நடந்துவரும் தமது போராட்டத்தை அரசாங்கமோ, தமிழ் தலைமைகளோ கருத்தில் கொள்ளாத நிலை காணப்படுவதாகவும் எனவே சர்வதேசமும், புலம்பெயர் சமூகமும் இதில் தலையிட்டு தமது பிள்ளைகளை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இவ்வூர்வலத்தினை நடத்தினர். வவுனியா கந்தசுவாமி கோவிலில் ஆரம்பமாகி மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து கண்டி வீதி ஊடாக போராட்டம் இடம்பெற்ற இடத்தினை வந்தடைந்தனர். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் வருகையை எதிர்பார்த்து தாய்மார் தவம் என்ற தொனிப்பொருளில் பாதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தனர்.