வடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டுச் சோதனையைத் தொடர்ந்து, 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என, ஜப்பானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அணுகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்ட சுரங்கம் இடிந்து வீழ்ந்ததிலேயே, இவ்வுயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என அறிவிக்கப்படுகிறது.
ஜப்பானின் 6ஆவது அணுகுண்டுச் சோதனை, செப்டெம்பர் 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையே, வடகொரிய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அணுச்சோதனையாகக் கருதப்பட்டது. ஆனால், இச்சோதனையின் போது, அது மேற்கொள்ளப்பட்ட சுரங்கம் இடிந்து வீழ்ந்தது என, முன்னரே செய்தி வெளியாகியிருந்தது. Read more