எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன பொது இலச்சினையின் கீழ் போட்டியிட தயார் என இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பேருவளை தொகுதியில் அவ்வாறு போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.