Sirisenajpgஇலங்கையில் ஜப்பான் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜப்பான்உயர்மட்டத் தூதுக்குழுவொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளது.

ஜப்பான் இலங்கைக்கு உண்மையான நண்பனாக தொடர்ச்சியாக உதவி வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என தூதுக்குழுவின் தலைவர் சர்வதேச கூட்டுறவு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் உதவி அமைச்சர் Kazuya Nashida ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயின் அழைப்பை அவர், ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளார். இத்தூதுக்குழுவில் ஜப்பானியத் தூதுவர் kenichi Suganuma மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர். வெளிவிவகார அமைச்சர் செயலாளர் பிரசாத் காரியவசமும் இந்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறப்பிடத்தக்கது.