Header image alt text

worldபூமியைப் போன்று உயிரினங்கள் வாழத்தகுந்த 20 புதிய கிரகங்களை அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசா மையம் ‘கெப்லர்’ டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சக்திவாய்ந்த அதிநவீன டெலஸ்கோப் மூலம் விஞ்ஞானிகள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் பல புதிய கிரகங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், உயிரினங்கள் வாழத்தகுந்த 20 புதிய கிரகங்களை ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். Read more

Captureஅனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய்ய கோரியும் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அரசியற் கைதிகளுக்கெதிரான வழக்கை இடமாற்றியமைக்கு எதிராக

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கை விசாரணை செய்யகோரியும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும் வவுனியா கச்சேரிக்கு முன்பாக கொட்டும் மழையில் இன்று மனித சங்கிலிப் போராட்டம் இடம்பெற்றது. Read more

image_5fb1cf3ebeமட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சிறுபான்மை இனங்களிடையேயான முரண்பாடுகளுக்கு எதிராக மட்டக்களப்பு நகர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு இரு சமூகங்களும் சிக்குப்படக்கூடாது என்ற வகையில், சமவுரிமை இயக்கம் என்னும் அமைப்பு, இந்தச் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. Read more

ranil australia prime ministerஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் மல்கொம் டேர்ண்புல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை,

கொழும்பு அலரிமாளிகையில் வைத்து, சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

mervil silvaமுன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா தேசிய மக்கள் கட்சி என்ற பெயரில் இன்று புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். கொழும்பு நாரஹேன்பிடவில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கட்சி காரியாலயமும் திறக்கப்பட்டது.

இதன்போது, கருத்து தெரிவித்த மெர்வின் சில்வா, நாட்டை நேசிக்கும் அனைத்து தரப்பினரும் தம்முடன் இணையுமாறு அழைப்பு விடுப்பதாக கூறினார்.

maithriஉலக பௌத்த மகா சம்மேளனத்தின் 7வது மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமானது. மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

47 உறுப்பு நாடுகளை சேர்ந்த 300 தேரர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

thumb_large_1_Green_Cardஅமெரிக்க அரசு ஆண்டு தோறும் வழங்கிவரும் ‘க்றீன் கார்ட் லொட்டரி’ திட்டத்தை இரத்துச் செய்யப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் நேற்று தாக்குதல் நடத்திய தீவிரவாதி, மேற்படி லொட்டரி திட்டம் மூலமே அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்தார். இதைச் சுட்டிக்காட்டியே இத்திட்டத்தை இரத்துச் செய்யப்போவதாக ட்ரம்ப் தெரிவித்தார். “எமது நாட்டு மக்களின் பாதுகாப்பே எனது முதலும், முக்கியமானதுமான நோக்கம். அதை உறுதிப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் தவறில்லை என்பதே எனது எண்ணம். Read more

gnanasaraநாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என, பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு குறித்து கலந்துரையாட வேண்டிய அவசியம் கூட இல்லை என, அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டு மக்களுக்கு உள்ளது அரசியலமைப்பு குறித்த பிரச்சினை அல்ல, வாழ்வது குறித்த பிரச்சினையே எனவும் அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர சுட்டிக்காட்டியுள்ளார்.

Geethaகீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன் முறையீட்டு மனு தொடர்பிலான தீர்வு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் நேற்றைய தினம் அறிவித்திருந்தது.

இதற்கமைய ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றினால் வழங்கப்பட்டிருந்த தீர்ப்பு சரியானதே என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கீதா குமாரசிங்க வெற்றிப்பெற்றிருந்தார். Read more

finaltyவவுனியாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு ஜூலை 19ம் திகதி செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த மொஹமட் துவான் என்பவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் இந்த தீர்ப்பை அளித்துள்ளார். இதற்கமைய, செட்டிக்குளத்தைச் சேர்ந்த ரவீந்திர ஜோதி, நேசராசா மற்றும் குமார் ஆகிய மூவரே குற்றவாளிகள் என இனங்காணப்பட்டுள்ளது. Read more