Header image alt text

xzczxcxஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான சந்திப்பு யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்றுமுற்பகல் 10மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இச் சந்திப்பில் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் பங்கேற்கவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தன. இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ரெலோ சார்பில் சட்டத்தரணி என்.சிறீகாந்தா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், புளொட் சார்பில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், செயலாளர் சு.சதானந்தன், மாகாணசபை அமைச்சர் க.சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

dfgfgஅநுராதபுரத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் தற்காலிகமாக தமது போராட்டத்தினை கைவிட்டுள்ளனர். உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்த அரசியல் கைதிகளுக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.

இதன்போதே அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது. அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் நேற்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. Read more

americaஅரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் தோமஸ் ஏ ரினன் அடுத்தவாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

நாளைமுதல் திகதி முதல் 7 ஆம் திகதிவரை பங்களாதேஸ் இலங்கை முதலான நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார். 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அவரின் பங்களாதேஸ் பயணம் இடம்பெறவுள்ளது இதன்போது, அவர் பங்களாதேசுடனான இரு தரப்பு உறவுகள் மற்றும் ரோஹிங்கிய பிரச்சினை குறித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

z2 - Copyஎமது புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த பற்குணராசா சிவதீபன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மானிப்பாய் சமுர்த்தி வங்கி பிரிவில் உள்ள 9 கிராமங்களைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின் தங்கிய 35 குடும்பங்களுக்கு சங்க தலைமை காரியாலயத்தில் வைத்து நுளம்பு வலைகள் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி விண்ணப்பம் மானிப்பாய் சமுர்த்தி வங்கி பிரிவிற்குட்பட்ட 9 கிராமங்களில் அதிகமான நுளம்பு தாக்கம் இருப்பதுடன் கடந்த வருடம் அதிகமான டெங்கு தாக்கத்திற்குட்பட்ட கிராமங்களாக இருப்பதனால் இவ் வருடமும் மழை காலம் ஆரம்பித்துள்ளமையினால் நுளம்பு தாக்கத்திலிருந்து அவர்களை பாதுகாத்து கொள்ள Read more

image_446be3f686ஐ.நாவின் சமதான நடவடிக்கைகளில் முதல் முறையாக இலங்கை பெண் இராணுவ அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர். மத்திய ஆபிரிக்காவின் சமாதான நடவடிக்கைகளுக்கான விஜயத்தை இலங்கை பெண் இராணுவ அதிகாரிகள் இருவர் மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த மேஜர் திந்தி மென்டிஸ், இலங்கை இராணுவ மகளிர்ப் படையணியைச் சேர்ந்த நிஷ்ந்தி லியணகே ஆகியோரே, இவ்வாறு ஐ.நாவின் சமதான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். Read more

ananthiஇலங்­கையில் தமி­ழர்கள் பாது­காப்­பாக வாழும் சூழல் இன்னும் ஏற்­ப­ட­வில்லை என மகளிர் விவ­கார அமைச்சர் அனந்தி சசி­தரன் தெரி­வித்­துள்ளார். புலம் பெயர் நாடு­களில் அகதி தஞ்­சக்­கோ­ரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­களை திருப்பி அனுப்பும் நட­வ­டிக்­கை தொடர்பிலான அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் உள்­ள­டங்­கிய இலங்­கையின் எப்­ப­கு­தி­யிலும் தமி­ழர்கள் பாது­காப்­பாக வாழும் சூழல் இன்னும் ஏற்­படவில்லை. இந்­நி­லையில் மேற்­கு­லக நாடு­களில் அகதி தஞ்­சக்­கோ­ரிக்கை நிரா­க­ரிக்­கப்­படும் ஈழத்­த­மி­ழர்­களை திருப்­பி­ய­னுப்­பு­வ­தென்­பது அந்­தந்த நாடுகள் கடைப்­பி­டித்­து­வரும் மனி­தா­பி­மானம் மற்றும் மனித உரிமை சார்ந்த கொள்­கை­க­ளையும் கோட்­பா­டு­க­ளையும் கேள்­விக்­குள்­ளாக்­கு­வ­தா­கவே அமையும்.
Read more

drawnமாத்தளை, லக்கல தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்றவர்களில் குறைந்தது 10 பேரையாவது காணவில்லையென முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆற்றில் கூட்டமாக குளிக்கச் சென்றவர்களில் 10 பேரையே காணவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளின் பொருட்டு பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.