americaஅரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் தோமஸ் ஏ ரினன் அடுத்தவாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

நாளைமுதல் திகதி முதல் 7 ஆம் திகதிவரை பங்களாதேஸ் இலங்கை முதலான நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார். 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அவரின் பங்களாதேஸ் பயணம் இடம்பெறவுள்ளது இதன்போது, அவர் பங்களாதேசுடனான இரு தரப்பு உறவுகள் மற்றும் ரோஹிங்கிய பிரச்சினை குறித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுச் செயலர் எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார். இதன்போது, அரச மற்றும் அரச சார்பற்ற தரப்பினர்களை சந்தித்து இரு நாடுகளின் உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இலங்கை வெளியுறவுச் செயலாளர் பிரசாத் காரியவசத்துடன் இணைந்து 6 ஆம் திகதி பிற்பகல் கூட்டு ஊடக சந்திப்பொன்றை நடத்த உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் மஹேஸினி கொலன்னே தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.