ananthiஇலங்­கையில் தமி­ழர்கள் பாது­காப்­பாக வாழும் சூழல் இன்னும் ஏற்­ப­ட­வில்லை என மகளிர் விவ­கார அமைச்சர் அனந்தி சசி­தரன் தெரி­வித்­துள்ளார். புலம் பெயர் நாடு­களில் அகதி தஞ்­சக்­கோ­ரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­களை திருப்பி அனுப்பும் நட­வ­டிக்­கை தொடர்பிலான அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் உள்­ள­டங்­கிய இலங்­கையின் எப்­ப­கு­தி­யிலும் தமி­ழர்கள் பாது­காப்­பாக வாழும் சூழல் இன்னும் ஏற்­படவில்லை. இந்­நி­லையில் மேற்­கு­லக நாடு­களில் அகதி தஞ்­சக்­கோ­ரிக்கை நிரா­க­ரிக்­கப்­படும் ஈழத்­த­மி­ழர்­களை திருப்­பி­ய­னுப்­பு­வ­தென்­பது அந்­தந்த நாடுகள் கடைப்­பி­டித்­து­வரும் மனி­தா­பி­மானம் மற்றும் மனித உரிமை சார்ந்த கொள்­கை­க­ளையும் கோட்­பா­டு­க­ளையும் கேள்­விக்­குள்­ளாக்­கு­வ­தா­கவே அமையும்.
கடந்த ஆட்­சிக்­கா­லங்­களில் நடை­பெற்று வந்த தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான அச்­சு­றுத்தல் நிலை­யா­னது இன்று மறை­மு­க­மான வகையில் அதே வீச்­சோடு தொடர்ந்து வரு­கின்­றது. போரிற்கு பின்­ன­ரான காலத்தில் தமிழர் தாய­கத்தில் வாழ்ந்து வரும் மக்கள் அந்த சூழ­லுக்கு தக்­க­வாறு தம்மை தக்கவைத்துக்கொண்டு வாழப்பழகிக் கொண்­டுள்­ளார்கள்.

இருந்தும் அன்­றாடம் ஏற்­படும் அர­சியல் மற்றும் உரிமைப் பிரச்­சி­னைகள் குறித்த சாத்­வீகப் போராட்­டங்­களில் முன்­நின்று செயற்­ப­டு­ப­வர்­களை இலக்­கு­வைத்து இல ங்கை இரா­ணுவ கட்­ட­மைப்பில் உள்­ள­வர்­களால் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­க­வு­மான அச்­சு­றுத்தல் நட­வ­டிக்­கைகள் தற்­போதும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. தம்­சார்ந்த மக்கள் சமூ­கத்தின் மீதான அக்­க­றை­யின்­பாற்­பட்டு செயற்­ப­டு­ப­வர்­க­ளைக்­கூட அச்­சு­றுத்தும் போக்­கா­னது ஜன­நா­யக விரோ­தப்­போக்கின் வெளிப்­பா­டாகும்.

மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்­களும் இதற்கு விதி­வி­லக்­கல்ல. அவர்­களும் இலங்கை இரா­ணுவம் மற்றும் புல­னாய்வுத் துறை­யி­னரால் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாகி வரு­வ­துடன் தொடர் கண்­கா­ணிப்­பிற்­குள்­ளாக்­கப்­பட்டும் வரு­கின்­றனர்.

அண்­மையில் இலங்­கைக்கு உத்­தி­யோகபூர்வ விஜ­யத்­தினை மேற்­கொண்ட ஐக்­கிய நாடுகள் விசேட அறிக்­கை­யாளர் பப்லோ டி கிரீப்பின் மதிப்­பீட்டின் அடிப்­ப­டை­யி­லான பரிந்­து­ரை­களில், மனித உரிமை காப்­பா­ளர்கள், சமூக செயற்­பாட்­டா­ளர்கள் முக்­கி­ய­மாக பெண்கள் ஆகிய தரப்­பினர் மீதான பாது­காப்பு தரப்பின் கண்­கா­ணிப்பு உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும் என காட்­ட­மாக குறிப்­பிட்­டுள்­ளதன் மூலம் மேற்­படி விட­யங்­களின் உண்மைத்­தன்­மை நிரூ­ப­ண­மா­கி­யுள்ளது.

இதை­விட, அகதி தஞ்­சக்­கோ­ரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்டு இலங்­கைக்கு திருப்­பி­யனுப்­பப்­ப­டுவோர் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்தே குற்­றப்­பு­ல­னாய்வுத் துறை­யி­னரால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டு­வரும் சம்­பங்கள் தொடர்ந்து வரு­கின்­றன என்றார்.