மாத்தளை, லக்கல தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்றவர்களில் குறைந்தது 10 பேரையாவது காணவில்லையென முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆற்றில் கூட்டமாக குளிக்கச் சென்றவர்களில் 10 பேரையே காணவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளின் பொருட்டு பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.