xzczxcxஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான சந்திப்பு யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்றுமுற்பகல் 10மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இச் சந்திப்பில் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் பங்கேற்கவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தன. இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ரெலோ சார்பில் சட்டத்தரணி என்.சிறீகாந்தா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், புளொட் சார்பில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், செயலாளர் சு.சதானந்தன், மாகாணசபை அமைச்சர் க.சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இதன்போது உள்ளுராட்சி தேர்தலுக்கு முகம் கொடுப்பது தொடர்பிலும், மாவட்டங்கள் தோறும் கட்சிகளின் அடிப்படையில் தலா இருவரைக் கொண்டு மாவட்டக் குழுக்களை நியமித்து வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் நடவடிக்கைகளை மாவட்டக் குழுக்கள் ஊடாக முன்னெடுப்பது பற்றியும் மேலும் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.