Header image alt text

missileசவுதி அரேபியா நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சவுதி அரNபியாவின் தலைநகராக ரியாத்திலுள்ள சர்வதேச விமான நிலையம் அருகே வடகிழக்கு பகுதியில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் விமானங்களை குறிவைத்து நடத்தப்பட்டது என கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தி நிறுவனங்கள் கூறுகையில், ஏவுகணை தாக்குதல் தொடர்பான சேத விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. Read more

lord nasbeyஇலங்கையில் போர்க் குற்றங்கள் நடந்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைத்துள்ள புள்ளி விபரங்கள் சரியானவை அல்ல என, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். லோர்ட் நெஸ்பி என்பவரே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்படி, தருஸ்மன் அறிக்கையை அடிப்படையாக கொண்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அவர் கூறியுள்ளார். மேலும், அந்த அறிக்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டாலும், சுமார் 7,000 பேரே இவ்வாறு கொல்லப்பட்டதாகவும் லோர்ட் நெஸ்பி சுட்டிக்காட்டியுள்ளார்.

protest newயாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலி பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி அப் பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வசாவிளான் சமூக நலன் அமைப்பினர் ஏற்பாடு செய்த இப் போராட்டம் இன்று காலை, வசாவிளான் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தின் வாசஸ்தலம் வரை சென்றது. 30 வருடங்களிற்கு மேலாக படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது நிலங்களை விடுவித்து தங்கள் அகதி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள். Read more

dffgமாத்தளை, லக்கலை, தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்ற நிலையில் காணாமல்போன 8 பேரில் இதுவரை 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று நண்பகல் வரை இடம்பெற்ற மீட்பு நடவடிக்கை வரை 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ன.

இன்னும் ஒருவரது சடலம் தற்போது வரை தேடப்பட்டு வருகிறது. காலநிலை காரணமாக சடலத்தை தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக லக்கலைப் பொலிசார் தெரிவிக்கின்றனர். நாத்தாண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரு குடும்ப அங்கத்தவர்கள் லக்கலை தெல்கமு ஆற்றில் நீராடியுள்ளனர். அவ்வேளையில் திடீர் என வெள்ள நீர் ஆற்றுடன் கலந்ததால் மேற்படி 8 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். Read more

missingஇலங்கையில் உள்நாட்டு யுத்தம் உட்பட பல்வேறு சம்பவங்களின் போது, காணாமல் போனவர்களின் இறப்புகளை பதிவு செய்து, மரண சான்றிதழை பெறுவதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் மேலும் இரு ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இது தொடர்பான சட்டம் ஏற்கனவே இரு தடவைகள் நீடிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது தடவையாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறித்தலை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன வெளியிட்டுள்ளார். Read more

3காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய தீர்வு எதுவும் இதுவரை எட்டப்படவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் நிலைமை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையில் பணியாற்றிய பிரித்தானியாவைச் சேர்ந்த யோலன்டா போஸ்டர், கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேற்று சந்தித்தார். இதன்போதே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அவரிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

sssdfdமட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாழங்குடாவில் அமைக்கப்பட்டிருந்த படை முகாம் அகற்றப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு, கிழக்கில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தாழங்குடாவில் தனியார் காணியொன்றில் இந்தப் படைமுகாம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நல்லாட்சியின் கீழ், தனியார் காணிகளில் உள்ள படை முகாம்கள் அகற்றப்படவேண்டுமென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அமைவாக, இந்தக் காணி விடுவிக்கப்பட்டது. Read more

accident (12)நுவரெலியா மாவட்டம், டயகம – ஹற்றன் வீதி, என்சி பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

deadகொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தின் அடுக்கு மாடி குடியிருப்பொன்றின் பாதுகாவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

37 வயதுடைய கொழும்பு 13 ஜிந்துபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஆர்.திலகராஜா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குடியிருப்பின் நுழைவாயில் தூண் ஒன்றில் அந்த நபர் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். Read more