சவுதி அரேபியா நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சவுதி அரNபியாவின் தலைநகராக ரியாத்திலுள்ள சர்வதேச விமான நிலையம் அருகே வடகிழக்கு பகுதியில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் விமானங்களை குறிவைத்து நடத்தப்பட்டது என கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தி நிறுவனங்கள் கூறுகையில், ஏவுகணை தாக்குதல் தொடர்பான சேத விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். இது சுமார் 500 கி.மீ. வரை சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை வகையைச் சார்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.