deadகொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தின் அடுக்கு மாடி குடியிருப்பொன்றின் பாதுகாவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

37 வயதுடைய கொழும்பு 13 ஜிந்துபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஆர்.திலகராஜா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குடியிருப்பின் நுழைவாயில் தூண் ஒன்றில் அந்த நபர் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சடலம் கலுபோவில மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.