அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டத்தொடர் 28ஆவது தடவையாக இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் இலங்கை பற்றிய மீளாய்வு எதிர்வரும் 15 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது. அதனை தொடர்ந்தும் மீண்டும் 17ஆம் திகதியும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட 30 வருட யுத்தத்தின் பின்னர் பல்வேறு பரிந்துரைகளை இதன்போது மனித உரிமைகள் பேரவை முன்வைக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.