thomas chenanஐக்கிய அமெரிக்காவின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான பிரதி இராஜாங்க செயலாளர் தோமஸ் ஸ்செனன் இன்று இலங்கைக்க விஜயம் செய்யவுள்ளார்.

தனது பங்களாதேசுக்கான விஜயத்தை நிறைவு செய்து விட்டு இன்று பிற்பகல் அவர் நாட்டை வந்தடைவார் என, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தனது விஜயத்தின் போது, தோமஸ் ஸ்செனன், இலங்கையின் உயர்மட்ட அரசியல் பிரமுகர்கள் பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், அரச சார்பற்ற அமைப்புக்களுடனும் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார். மேலும், தனது இலங்கை விஜயத்தை நிறைவுசெய்து நாளை அவர் தாயகம் திரும்புவார் எனவும் கூறப்படுகின்றது.