மனுஸ் தீவு அகதி முகாமிற்கான அடிப்படை வசதிகளை மீளவும் வழங்க முடியாது என்று பப்புவா நியுகினி நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த முகாம் கடந்த வாரம்முதல் மூடப்பட்டநிலையில், அதற்கான மின்சாரம், நீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அங்குள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 600 அகதிகள் வரையில் நிர்கதியாகியுள்ளனர். அவர்களை பப்புவா நியுகினி மறறும் லோரெங்கோ ஆகிய முகாம்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும், அது அகதிகளின் உரிமை மீறலாக பார்க்கப்படுகிறது. படகுகள் மூலம் அவுஸ்திரேலிய சென்ற அகதிகள் விசாரணைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். Read more