மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகளில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் தோமஸ் செனன் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார செயலாளர் பிரசாத் காரியவசத்துடன், நேற்று மாலை இலங்கை அமெரிக்க இரண்டாம் சுற்று ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டார். அதன் பின்னரான கூட்டு அறிவிப்பில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க – இலங்கை கூட்டு அனுசரணையுடனான பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கும் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் சர்வதேச அளவில் எழுந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பான அச்சுறுத்தலை நீக்க இலங்கையும் அமெரிக்காவும் கூட்டிணைந்து செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது