மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி பெரியகல்லாற்றில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் காயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளின் தகப்பன் சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்துள்ளார்.
மின்சார சபையில் கடமைபுரியும் பெரியகல்லாற்றை சேர்ந்த இரண்டு பிள்ளை தந்தையான நடேசன் வயசு 37 என்பவரே குறித்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவராவார். கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, போக்கவரத்திற்கு சபைக்கு சொந்தமான பஸ்வண்டி பிரயாணிகளை ஏற்றுவதற்காக நிறுத்திய போது, அதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் நின்ற குறித்த நபர்மீது பின்வந்த படிரக வாகனம் மோதியதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மூளையில் ஏற்பட்ட இரத்தகசிவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.