gfhfghgகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திகாந்தன் நாளைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாளையதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.