Header image alt text

budgetஎதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. சுதந்திர இலங்கையின் 71 ஆவது வரவு- செலவுத் திட்டமும் நல்லாட்சி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு – செலவுத்திட்டமுமாக அமைந்த வரவு-செலவுத்திட்டத்தின் விபரம் வருமாறு,

வரவு – செலவுத் திட்ட சமர்ப்பிப்பில் பங்குகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியினர் சைக்கிளில் பாராளுமன்றிற்கு வருகை தந்தனர்.
நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றிற்கு வருகை
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை கூடியது
Read more

batti-gsமட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் கிராம சேவகர்கள் இன்மையினால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர் புறத்தை அண்டிய பகுதிகளிலும் சில கிராமப்புறங்களிலும் இன்று பல கிராம சேவகர் அலுவலகங்கள் மூடிக்கிடக்கின்றன. மாவட்டத்திலுள்ள 343 கிராம சேவகர் பிரிவுகளில் 235 பிரிவுகளில் கிராம சேவகர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், 108 கிராம சேவகர் பிரிவுகளில் உதவி கிராம சேவகர்களே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Read more

sdfdsfdsfdநாட்டின் மிக முக்கியமான தருணத்திலும், கூட்டு எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டத் தவறவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றில் வாசிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியினர் துவிச்சக்கர வண்டிகளில் பாராளுமன்றுக்கு வருகை தந்திருந்தனர். Read more

neyil rosharioகடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் நெய்ல் ரொசாரியே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னதாக உதவி கூட்டுத் தலைமை அதிகாரியாக பதவி வகித்து வந்துள்ளார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ACCIDENTமுல்லைதீவு வற்றாப்பளை பிரதேசத்தில் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மரம் ஒன்றுடன் மோதுண்டு 24 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வற்றாப்பளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதி வேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெறுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

budget2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுகின்றது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று மாலை 3 மணிக்கு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றது.

நிதி அமைச்சராக மங்கள சமரவீர பதவியேற்றதன் பின்னர் முன்வைக்கப்படவுள்ள முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். அதேபோல, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மூன்றாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுகின்றது. Read more

cv vigneswaranதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் ஒருமித்து செயற்பட வேண்டும் என்றும் கருத்து மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமையினாலேயே கட்சிப் பிளவுகள் ஏற்படுவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தங்களுக்கு இடையில் இணக்கப்பாட்டுடன் ஆசன ஒதுக்கங்களை பங்கிட்டு, ஒற்றுமையாக போட்டியிடுவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

torturedஇலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், தமிழர்கள் தாக்கி சித்திரவதை செய்யப்படுவதும், வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதும் தொடர்வதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள 50க்கும் மேற்பட்ட ஆண்கள், தற்போதுள்ள அரசாங்கத்தின் கீழும், தாம் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம், தாக்குதல் உள்ளிட்ட சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக, அசோசியேட்டட் பிரஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு கூறியுள்ளனர். Read more

hisbullaவடக்கு கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. வடக்கும் கிழக்கும் இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படக் கூடாது. அதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதியளிக்கமாட்டோம் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசியலமைப்பு சபையில் நேற்று புதன்கிழமை அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான 5ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, Read more