cv vigneswaranதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் ஒருமித்து செயற்பட வேண்டும் என்றும் கருத்து மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமையினாலேயே கட்சிப் பிளவுகள் ஏற்படுவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தங்களுக்கு இடையில் இணக்கப்பாட்டுடன் ஆசன ஒதுக்கங்களை பங்கிட்டு, ஒற்றுமையாக போட்டியிடுவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.