ஐக்கிய நாடுகளின் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் தேர்தலுக்காக இந்தியாவின் டல்வீர் பண்டாரியின் பெயரை இலங்கை முன்மொழிந்துள்ளது. இந்த தேர்தல் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
இதன்படி, மூன்று சுற்று தேர்தல்களின்மூலம் ஐந்து நீதிபதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். ஒவ்வொரு நாடும் ஐந்து வாக்குகளை அளிக்கமுடியும். இதன்போது ஒரே வேட்பாளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை ஒரு நாடு அளிக்கமுடியும். இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் 8 அமர்வுகளில் பெரும்பான்மை 97 வாக்குகளில் அதிக வாக்குகளை ஐந்து நீதிபதிகளில் ஒருவர் பெறும்போதே தேர்தல் நிறைவுபெறும். இந்தியாவின் பண்டாரியை, அவுஸ்திரேலியா, பங்களாதேஸ், கொலம்பியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் வேட்பாளராக பிரேரித்துள்ளன. இறுதியாக இலங்கையும் அவரின் பெயரை பிரேரித்துள்ளது.