marsசெவ்வாய் கிரகத்தின் தட்பவெட்ப நிலை, காலநிலை மாற்றம், தண்ணீர் போன்றவை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தியா மங்கல்யான் என்ற செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது.

இதேபோன்று நாசாவில் இருந்து செவ்வாய் கிரகத்தில் உள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய மேலும் விண்கலம் ஒன்று அடுத்த ஆண்டு அனுப்பப்பட உள்ளது. அந்த விண்கலத்தில் மனிதர்களின் பெயர்களை சிலிகான் சிப்பில் தலைமுடியை விட சிறிய அளவில் எழுதி அதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவர். அதற்கான பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் பெயர்களை இணையம் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.உலகம் முழுவதுமிலிருந்து 24 லட்சம் மக்கள் பதிவு செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து 1 லட்சம் மக்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இந்தியா இந்த வரிசையில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

பல்வேறு செயற்கைக் கோள்களை பல பில்லியன் டாலர்களில் உருவாக்கி செவ்வாயில் நாசா ஆய்வு செய்து வரும் நிலையில், மனிதர்களை அங்கு குடியேறச் செய்யும் திட்டம் நாசாவின் முக்கிய கனவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. நாசா மட்டும் அல்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்களும் பல பில்லியன் டாலர்களை கொட்டி விண்வெளியில் மனிதர்கள் குடியேற்றம் செய்யும் திட்டத்திற்கு இரவு பகலாக உழைத்து வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.