UN human right commssionஇலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச பருவகால மீளாய்வு கூட்டத்தில் ஆராயப்பட உள்ளது.

இந்த மீளாய்வு கூட்டமானது ஜெனிவாவில் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால், வழங்கப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களின் அறிக்கைகள் என்பன இதன்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போர்க்குற்றச்சாட்டுகள், பயங்கரவாத தடைச்சட்டம், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட உள்ளதாவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2008 மற்றும் 2012 காலப்பகுதிகளில், சர்வதேச பருவகால மீளாய்வுகள் இடம்பெற்றிருந்தன.