Header image alt text

ddffdதென்னாப்பிரிக்கா உயர்ஸ்தானிகர் மாக்ஸ் அம்மையாருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவுக்குமிடையிலான சந்திப்பு, ஆளுநர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்தி, தேசிய நல்லிணக்க விவகாரங்கள், கிழக்கு மாகாணத்தில் தென்னாப்பிரிக்காவின் முதலீட்டு முயற்சிகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. Read more

oipopவவுனியா, ஈச்சங்குளம் பலநோக்குக் கூட்டுறவு சங்க மகாகணபதி கிளையை உடைத்து திருடிச்சென்ற நான்கு திருடர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, Read more

dsfgfgவவுனியா புகையிரத நிலைய வீதி சுத்தானந்த மண்டபத்திற்கு முன்பாக இன்று காலை 5.45 மணியளவில் இளைஞனொருவன் துப்பாக்கி முனையில் கடத்த முயற்சித்த சம்பவம் பொதுமக்களினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா நகரிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வாகனத்தில் பயணித்த வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த கஜேந்திரன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் வடமாகாண அமைப்பாளர் பொன்னுத்துரை அரவிந்தன் ஆகியவர்களை இரு சொகுசு வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் வழிமறித்து தங்களது வாகனத்தில் ஏறுமாறு தெரிவித்துள்ளனர். Read more

asdsdயாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை பகுதியில் யாழ்தேவி தொடரூந்தில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் 3:00 மணியளவிலும் புத்தூர் சந்தி அம்மன் வீதியில் இடம்பெற்ற இந்த தொடரூந்து விபத்தில் புத்தூர் சந்தி பகுதியில் வசித்து வந்த தெய்வேந்திரன் ஞானசுதன் என்பவர் உயிரிழந்துள்ளார். Read more

univ-of-jaffnaநாளைய தினம் வழமைபோல் யாழ் பல்கலைக்கழக அனைத்து பீடங்களினதும் விரிவுரைகள் ஆரம்பமாகவுள்ளன. இதற்கமைய அனைத்து பீட மாணவர்களையும் விரிவுரைகளுக்கு சமூகமளிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.

கல்விச்செயற்பாடுகள் பாதிக்கப்படாத நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து போராட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

voteஎதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்படும் வேட்பு மனுக்களில் 25வீத பெண் வேட்பாளர்கள் உள்ளடக்கப்படாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுமென்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான திருத்தச்சட்டத்தின்படி அந்தத் தேர்தல்களின்போது தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்களில் 25வீத பெண் வேட்பாளர்கள் கட்டாயமாக உள்ளடக்கப்பட வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முஸ்தப்பா கூறினார். Read more

sri lankan refugees in indiaதமிழகத்தின் விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தை இலங்கை அகதிகள் முகாமில் கழிப்பறை, சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில் வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் அருகே குல்லூர் சந்தை கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் 305 இலங்கை அகதிகள் குடும்பத்தனர் வசிக்கின்றனர். இதில் உள்ள பலர் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கூலி தொழிலாளர்களாக பணி புரிந்து வருகின்றனர். Read more