asdsdயாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை பகுதியில் யாழ்தேவி தொடரூந்தில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் 3:00 மணியளவிலும் புத்தூர் சந்தி அம்மன் வீதியில் இடம்பெற்ற இந்த தொடரூந்து விபத்தில் புத்தூர் சந்தி பகுதியில் வசித்து வந்த தெய்வேந்திரன் ஞானசுதன் என்பவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலத்தை மீட்ட தொடரூந்து ஊழியர்கள் சாவகச்சேரி தொடரூந்து நிலையத்தில் சடலத்தை ஒப்படைத்துவிட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.