Gamini-Senarath-Lமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் காரியாலய பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று பேர் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு – கோட்டை பிரதான நீதிமன்ற நீதிவான் லங்கா ஜயரட்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு தாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக காமினி செனரத் அண்மையில் உயர் நீதிமன்றில் தெரிவித்தார்.  தம்மை நிதி மோசடி விசாரணை பிரிவினர் கைது செய்யாதிருக்க உத்தரவிட வேண்டும் என அவர் தாக்கல் செய்த மனு அண்மையில் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை வேறு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பான இறுதி அறிவிப்பு நாளை மறுதினம் (15) அறிவிக்கப்படும் என கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று உத்தரவிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவத்துடன் கூடிய 50 இலட்சம் நாட்காட்டிகளை அச்சிட்டு அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குறித்த இருவர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.