Header image alt text

UNஇலங்கை தொடர்பான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற விடயங்கள் குறித்த, நாட்டின் மனித உரிமைகள் பற்றிய அறிக்கை நாளை ஐக்கிய நாடுகள் சபையில் விமர்சிக்கப்படவுள்ளது.

ஜெனிவா நகரில் இது நடைபெறவுள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு நஸ்ட ஈடு வழங்குதல், பயங்கரவாத தடைச் சட்டம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் நடவடிக்கைகள் போன்ற இலங்கை குறித்த பல விடயங்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

sadsadasdவடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நோர்வேயும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஸ்தாபனமும் ஒன்றிணைந்து உதவியளிக்கவுள்ளன.

இதற்கான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் நோர்வே உயர்ஸ்தானிகரும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஸ்தாபனத்தினது இலங்கை பணிப்பாளரும் கைச்சாத்திட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மையில் குடியேற்றப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கும் நோக்கில் இரு தரப்பும் இணைந்து செயற்படவுள்ளன. Read more

dfggffgfgfgfggffநியுசிலாந்து நோக்கி பயணித்த அகதிகளின் படகு நான்கினை, அவுஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நியுசிலாந்தின் ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

குறித்த படகுகளில் 164 அகதிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளடங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகின்ற போதும், இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

manus_island1பப்புவா நியுகினிக்கு சொந்தமான மானஸ் தீவில் உள்ள ஏதிலிகளை பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாம் மூடப்பட்டுள்ள போதும், 421 ஏதிலிகள் அதில் இருந்து வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களை அழைத்துச் செல்வதற்காக இன்றையதினம் 6 பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. Read more

sdfdsfdfdகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 138 பயணிகளுடன் நேற்றிரவு பயணத்தை ஆரம்பித்த விமானமொன்று சிறிது நேரத்தில் மீண்டும் தரைக்கப்பட்டுள்ளது. இயந்திர கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரை நோக்கி பயணித்த விமானமொன்றே மீள தரையிறக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்றிரவு 11.30இற்கு பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் சில நிமிடங்களில் தரையிறக்கப்பட்டுள்ளது. Read more

jailசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தால் அண்மைக்காலமாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. Read more