இலங்கை தொடர்பான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற விடயங்கள் குறித்த, நாட்டின் மனித உரிமைகள் பற்றிய அறிக்கை நாளை ஐக்கிய நாடுகள் சபையில் விமர்சிக்கப்படவுள்ளது.
ஜெனிவா நகரில் இது நடைபெறவுள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு நஸ்ட ஈடு வழங்குதல், பயங்கரவாத தடைச் சட்டம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் நடவடிக்கைகள் போன்ற இலங்கை குறித்த பல விடயங்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.