யாழ்ப்பாணம் மானிப்பாய்சோதி வேம்படி வித்தியாசாலையின் பரிசளிப்பு விழா 14.11.2017 பிற்பகல் 2மணியளவில் பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் திருமதி சுனித்ரா சூரியராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. ச.சிவானந்தராஜா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், கொடியேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றன. தலைமையுரையினை அதிபர் திருமதி சு.சூரியராஜா ஆற்றினார். தொடர்ந்து விருந்தினர் கௌரவிப்பும், விருந்தினர் உரைகளும் இடம்பெற்றன. இதனையடுத்து பரிசில்களை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், திருமதி மீனா சித்தார்த்தன், கோட்டக்கல்வி பணிப்பாளர் ச.சிவானந்தராஜா ஆகியோர் வழங்கிவைத்தார்கள். தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்று சிரேஸ்ட ஆசிரியர் திருமதி ச.முருகவேள் அவர்களின் நன்றியுரை மற்றும் பாடசாலை கீதத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.