ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் கே.ஜி பிரிவில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தினால் மூன்று குடியிருப்புகள் சேதமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 10.15 மணியளவிலேயே இந்த தீ விபத்து சம்பவித்துள்ளது. நான்கு வீடுகளை கொண்ட குறித்த லயன் குடியிருப்பில் ஒரு குடியிருப்பு முற்றாக சேதமாகியுள்ளதுடன் மேலும் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன.தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனினும் வீட்டின் உபரணங்கள் சேதமாகியுள்ளன. ஹட்டன் பொலிஸாரும் பொதுமக்களும் ஹட்டன் நகரசபை தீயனைப்பு பிரிவினருடன் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள்ள கொண்டு வந்துள்ளதுடன், சேத விபரம் தொடர்பிலும் தீ பரவியமைக்கான காரணம் தொடர்பிலும் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.