அரச மற்றும் தனியார் ஒத்துழைப்பின் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்குரிய கைச்சாதிடப்பட்டுள்ள சலுகை உடன்படிக்கையை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல இணைந்து கடந்த ஜுலை 29 ஆம் திகதி இந்த சலுகை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கையின் விதப்புரைகளுக்கு அமைய அது கைச்சாத்திட்ட தினத்திலிருந்து 180 நாட்களுக்குள் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை நிபந்தனைகளை குறித்த தரப்பினர் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கமையவே தற்போது நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.