Header image alt text

court_hammerஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான எல்லை நிர்ணய குழுவின் முதல் பரிந்துரைகளுக்கு முரணாக, உள்ளூராட்சி மன்ற அமைச்சர் நியமித்த உப குழுவின் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி ஆறு பிரதேச சபைகளைச் சேர்ந்த ஆறு வாக்காளர்கள் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

உப குழுவின் பரிந்துரைகளை உள்ளடக்கி உள்ளூராட்சி அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி சட்டவிரோதமானது என தீர்மானித்து அமைச்சர் விடுத்த எல்லை நிர்ணய வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு, கண்டி, ஹாலிஎல, மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 வாக்காளர்களே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

anurathapuram-jailபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் கைதிகளின் வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அண்மையில் குறித்த மூன்று கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், இவர்களுக்கு எதிரான வழக்கினை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. Read more

trainதொடரூந்து தடம்புரள்வு காரணமாக வடக்கு தொடரூந்து சேவைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதனால் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி இடம்பெறும் தொடரூந்து சேவைகள் அனுராதபுரம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும்ரூnடிளி;தொடரூந்து சேவைகள் மதவாச்சி வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. Read more

nalini muruganநளினி முருகனை விடுவிக்க முடியாது என்று சென்னை மேல் நீதிமன்றத்தில், தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி முருகன், தம்மை விடுவிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில்,

தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாடு கோரப்பட்டிருந்தது. இந்த மனுவிற்கு எதிராக தமிழக மாநில உள்துறை திணைக்களத்தின் பிரதி செயலாளரால் எதிர்ப்பு கடிதம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக என்.டி.ரீ.வி செய்தி வெளியிட்டுள்ளது.

housing schemeமுல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு இந்த ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சினூடாக 608 வீடுகள் வழங்கப்பட்டு, அதனுடைய வேலைகள் நடைபெற்று வருவதாக மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாவட்டச்செலயத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது, குறித்த மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் ஊடாக வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. Read more

iranaitivuகிளிநொச்சி – இரணைதீவில் உள்ள காணிகளை அடையாளப்படுத்தி, அளவீடு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 25ஆம் திகதி நிறைவடையும் என பூநகரிப் பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், குறித்த மாவட்டத்தின் அதிக கடல் வளம் கொண்ட இரணைதீவு இதுவரை விடுவிக்கப்படாது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதனால் இங்கே வாழ்ந்த குடும்பங்கள் இதுவரை மீள்குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் முழங்காவில் இரணைமாநகர் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். Read more

cabinet decisionகாணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தல் திருத்தத்தை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, காலத்துக்கு ஏற்றாற்போல் மிகவும் சரலமான நிபந்தனைகளை உள்ளடக்கிய கொடுப்பனவு அட்டையொன்றை அறிமுகப்படுத்துதல், கொடுப்பனவு அட்டையின் கீழ் வசிப்புக்காக வழங்கப்படுகின்ற காணிகளை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகளை செய்துகொடுத்தல், அடுத்த உரிமையைக் குறிப்பிடாது கொடுப்பனவு அட்டை உரித்தான நபர் ஒருவர் மரணிக்கும் போது அவருக்கு உரித்தான கொடுப்பனவு அட்டை சொத்தின் உரிமையை சாதாரண சிவில் சட்டத்தின் கீழ் கிடைக்கும் வகையிலான திருத்தங்களை உட்படுத்தியே, இந்தக் கட்டளைகள் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

swaminathanபுனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தைச் சட்டமாக்குவதற்கான சட்ட மூலம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதாவது, முறைத்தவறிச் சென்ற போர்வீரர்கள், தீவிரவாத அல்லது அழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் மற்றும் விஷ ஒளடதங்களுக்கு அடிமையானவர்கள் போன்றவர்களை புனர்வாழ்வளித்து, அவர்களை சமூகமயமாக்குவதற்கும் அவர்கள் தொடர்பான பின்னூட்டல்களை மேற்கொள்வதற்கும் ஏதுவான வகையில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகத்தை நாடாளுமன்ற சட்டமொன்றின் மூலம் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

ambanthota harbourஅரச மற்றும் தனியார் ஒத்துழைப்பின் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்குரிய கைச்சாதிடப்பட்டுள்ள சலுகை உடன்படிக்கையை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல இணைந்து கடந்த ஜுலை 29 ஆம் திகதி இந்த சலுகை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கையின் விதப்புரைகளுக்கு அமைய அது கைச்சாத்திட்ட தினத்திலிருந்து 180 நாட்களுக்குள் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை நிபந்தனைகளை குறித்த தரப்பினர் பூர்த்தி செய்ய வேண்டும். Read more