Header image alt text

mahinda desapriyaஉள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரும் தினம் எதிர்வரும் 27ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார். இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டு 14 தினங்களின் பின்னர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

trainவடக்கு புகையிரத வீதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டு இருந்த நிலையினை தொடர்ந்து புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், இன்று போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி மாத்தறை தொடக்கம் வவுனியா வரை பயணித்த புகையிரதம், மதவாச்சி மற்றும் பரசன்கஸ்வேவக்கு இடையில் தடம் புரண்டதால் வடக்கு புகையிரத போக்குவரத்துக்கு தடங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக, கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் புகையிரம் அனுராதபுரம் வரையும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிக்கும் புகையிரதம் மதவாச்சி வரையும் பயணித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Gotabaya Rajapakse (2)எவன் கார்ட் வழக்கில் பிரதிவாதிகளை நிபந்தனையற்ற பிணையில் விடுதலை செய்யுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் எழுத்து மூல அனுமதியின்றி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய உள்ளிட்ட 06 பிரதிவாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய உள்ளிட்ட 06 பிரதிவாதிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

jaliyaஅமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை உடனடியாக கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்னவினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக செயற்பட்ட காலப்பகுதியில் தூதுவர் காரியாலயத்திற்காக கட்டடம் ஒன்றை கொள்வனவு செய்த தருணத்தில் அமெரிக்க டொலர் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை முறையற்றவகையில் கையாண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Read more

swordயாழ்., வலிகாமம் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குழுவைத் தொடர்ந்து, வடமராட்சிப் பகுதியில் தாரா குழு பிரபல்யமடையத் தொடங்கியுள்ளது.

வடமராட்சிப் பகுதியில் நடந்தேறிய பல பாரிய கொள்ளைகள் மற்றும் தங்கச் சங்கிலி அறுப்பு போன்ற குற்றச்செயல்களுடன், இந்தக் குழுவுக்கு தொடர்பிருப்பதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதற்கமைய, பருத்தித்துறை – கொட்டடி மற்றும் வளலாய் – அன்டனிபுரம் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து, இந்தக் கும்பல் செயற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more